Posts

Showing posts from October, 2021

இசை தரும் இனிய பாடல்கள் 7

Image
7. தம்பி தம்பி தம்பி  தளராதே தம்பி ! தண்டச்சோறு என்பார்! தடிமாடு என்பார்! சண்டக்கோழி என்பார்! தரித்திரம் என்பார்! தூக்கி போடு எல்லாம்! துணிந்து நில்லு முன்னால்! எல்லாம் வரும் தன்னால்! ஏற்றம் தரும் பொன்னாள!  (தம்பி தம்பி தம்பி...) இசை பாடலுக்கு  இங்கே சொடுக்கவும்: 👇👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 6

Image
 6. வண்ண வண்ண பூக்களே...! உங்கள் கையில் நாளை உலகம்!    நீங்கள்தான் நாட்டின் திலகம்! தொலைதூர வானந்தான் தொட்டுவிடும் தூரந்தான்! அலைமீது ஆடுந்தான்               கரையேற்றும் ஓடந்தான்! தோல்வி கண்டு துவளாதே! வெற்றிகொள்ள தவறாதே! (வண்ண வண்ண...) இனிய காலை வணக்கம்! இசைப்பாடலுக்கு இங்கே சொடுக்குங்கள்:  👇👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 5

Image
5. சின்னக் கண்மணி...!         என் செல்லக்கண்மணி  உன் சிரிப்பு ஒளிவிடும் மத்தாப்பு! உன் முத்தம் தீராத தித்திப்பு! உன் அழுகை உள்ளத்தில் படபடப்பு! உன் மொழியே சந்தோச அறிவிப்பு! நீ வாழி நீடூழி வாழி! நீ வாழி நீடூழி வாழி! சின்னக் கண்மணி...! என் செல்லக்கண்மணி! சின்னக் கண்மணி...! என் செல்லக்கண்மணி நீ வந்தாய் ஒளி தந்தாய் உன் அப்பன் நானென்ற பேர் தந்தாய்  நீ பிறந்த நன்னாளுக்கு  அப்பாவின் அன்பான நல்வாழ்த்துக்கள்! நீ வாழி நீடுழி வாழி! நீ வாழி நீடூழி வாழி! (சின்னக் கண்மணி...!) இனிய காலை வணக்கம்! இசை பாடலுக்கு இங்கே சொடுக்கவும்: 👇👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 4

Image
  4. இதமான பாதை  சுகமான பயணம்் பாலைவனங்களோ?  வாழும் வாழ்க்கையோ?  நாளை இல்லையோ?  நம்பிக்கை தொல்லையோ?  நல்ல வீணையோ?  புழுதியில் எறிவதோ?  சொல்லு வழியினை!  சொல்லு வழியினை இறைவா! நாளும் வாடினேன்,  நானும் பாடினேன், நாளும் வாடினேன்,  நானும் பாடினேன், இறைவா........! இறைவா........! இனிய காலை வணக்கம்! இசைப் பாடலுக்கு இங்கே சொடுக்கவும்: 👇👇👇

இசை தரும் இனிய பாடல்கள் - 3

3. பூவில் நுழைந்து  தேனில் கலந்து...  பூவில் நுழைந்து தேனில் கலந்து  மணத்தை சுமந்து வானில் மிதந்து  காற்றில் நுழைந்து ஊற்றில் கலந்து  மருந்தைச் சுமந்து மனதைக் கவர்ந்து  வசந்த கால தென்றல் காற்று  வாரிச் செல்லும் இன்னிசைப்பாட்டு  காதில் கேட்கக் கரும்புச்சாறு  காலமெல்லாம் கவி பாடு! இனிய காலை வணக்கம்!

இசை தரும் இனிய பாடல்கள் - 2

Image
  2. இந்த நாள் இனிய நாள் நேற்று என்பது நினைவு ஆனது! நாளை என்பது கனவு ஆனது! இன்று மட்டுமே நிஜமானது! என்றும் இனிதாய் வாழ்ந்திடுவோம்! இசைப் பாடலைக் கேட்க  இங்கே சொடுக்குக! 👇👇👇 https://youtu.be/ctiQ20AuWc8

நாலு திசைக் கொலை 2

Image
  நாலு திசைக் கொலை 2 கூட்டத்தின் தலைவன்போல் இருந்த ஒரு நெடிய கருத்த மனிதன் டிரைவர் பக்கம் வர பின் தொடர்ந்தது கூட்டம்.  டிரைவர் ஜன்னல் வழியே தலையை வெளியே நீட்டினார். “எங்க ஊருலேயும் பஸ் நிறுத்தணும்.  நிப்பீங்களா இல்லையா? நிக்குமினு சொன்னாத்தான் பஸ்ஸை விடுவோம்,  என்ன சொல்றீங்க?” பின்னால் இன்னொரு பஸ்ஸும் வந்து நின்றது.  எதிர்பக்கம் இருந்தும் இன்னொரு பஸ்ஸும் வந்தது. அதுவும் நிறுத்தப்பட்டது. “இப்படி எல்லா ஊர்காரர்களும் கேட்டா நாங்க எப்படி பஸ்ஸை டைம்முக்குள்ளே எடுக்க முடியும்.  அதுக்கெல்லாம் டவுண் பஸ் இருக்குங்க.  எங்களை தொந்தரவு பண்ணாதீங்க" என்று ஒரு பஸ் டிரைவர் தைரியமாக பேசினார். “அதெல்லாம் முடியாது.  எங்க ஊருலே பஸ்ஸு நின்னே ஆகணும்.. இல்லைன்னா விட மாட்டோம். எல்லாம் ரோட்டிலே அப்படியே உட்காருங்க, பாத்துக்கலாம்..” தலைவரின் ஆணைக்கு கட்டுப்பட்டு தொண்டர்கள் ரோட்டில் கோஷம் போட்டபடியே அமர்ந்தனர்.  பயணிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை கூறிக்கொண்டு நிலைமையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  அருண் இரண்டு தரப்பு கருத்திலும் நியாயம் இரு...

இசை தரும் இனிய பாடல்கள் - 1

 1. காலையிலே ஆரம்பித்தேன் கந்த புராணம்( இசைப்பாடல்) ஒவ்வொரு மனிதருள்ளும் ரத்தத்தில் நாடி நரம்புகளில் ஊறிக் கிடப்பது கடவுள் நம்பிக்கை! அறிவு வளர்வதற்கு முன்பே உணர்வில்  ஊடுருவி விடுவது கடவுள் நம்பிக்கை! திக்கற்ற காட்டில் சிக்கியதுபோல்  யாரும் இல்லாக் கடலில் விழுந்ததுபோல் அல்லலுறும் நேரத்தில் ஆதரவாய் தெரிவது ஆண்டவன் மட்டும்தான்! கற்பனையே? உண்மையோ? ஆனால் யார் கைவிட்டாலும் கவலையுறும் நேரத்தில் நம்முடனே இருந்து நமக்கு கைகொடுத்து தூக்கி விடுவது கடவுள் மட்டும் தான்! அறிவு நம்ப மறுத்தாலும், உணர்வு கைபிடித்து அழைத்துச் சென்று மனதிற்குள் உட்கார வைத்து ஆராதனை செய்து விடுகிறது!  என்னுடைய 5 வயது பிஞ்சு மனதில் ஆணி அடித்து அமர்ந்து கொண்டவர் முருகப்பெருமான்!

நாலு திசைக் கொலை 1

Image
நாலு திசைக் கொலை 1 அப்போதுதான் புறப்பட்டு பஸ்டேண்டிலிருந்து மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த பஸ்சில் வலக்கையில் ஒரு சிறிய சூட்கேஸுடன் இடக்கையால் கம்பியைப் பிடித்து தொத்தி படிக்கட்டில் ஏறினான் அருண்.  தனக்கென்று ஓர் இடத்தை அங்கு அவர் தேடி பார்த்தபோது அநேகமாக அந்த பஸ் நிறைந்திருந்தது.  ஆனால் இரண்டு பேர் அமரும் ஒரு சீட்டில் ஓர் இரட்டை சரீர தொப்பை மனிதன் அமர்ந்திருந்தான். “ஸார் கொஞ்சம் நகறீங்களா? உட்கார்ந்துக்கறேன்". என்ன பார்த்து எவண்டா நகரச்சொல்றவன் என்று கேட்பதுபோல் அந்த தொப்பையன் அவனை எரிப்பது போல் அதிகார தோரணையுடன் பார்த்தான். “என்ன ஸார் மொறைக்கிறீங்க.. இரண்டு ஸீட்டையும் அடைச்சிகிட்டு உட்கார்ந்திருக்கீங்க..  ஒரு இடங்கொடுத்தா என்ன கொறைஞ்சா போயிடுவீங்க.. கொடுங்க ஸார்.  என்னமோ இரண்டு ஸீட்டு வாங்கிட்ட மாதிரி...” என்ன இவன் யாருன்னு நெனைச்சான்..எங்கிட்ட மோதறளவிற்கு ஒருத்தன் வந்துட்டானா.. இவனை பந்தாடணும் என்ற எண்ணம் மனதில் எழ அந்த தொப்பையன் கண்ணில் ஆத்திரமும், ஆவேசமும் மிதந்தன. “அதற்குள், கண்டக்டர் 'தம்பி, முன்னாடி வா இடம் இருக்கு' என்று அழைத்துக் கொண்டே அருணை நோக்...

8. அதுபோதும்...!

Image
  அதுபோதும்...! நான் இன்னும் உன்னைப்போல உயரவில்லை! ஆனால் இன்னும்  மனிதனாக இருக்கிறேன். இதுபோதும் எனக்கு! நானும் உயருவேன் நாளை! அப்போதும் மனிதனாக  இருப்பேன். அதுபோதும்  எனக்கு! *************************

1. தொடுவானப் பறவைகள்

Image
  1. தொடுவானப் பறவைகள் இப்படி ஒரு நாள் வரும் என்று நெடுநாளாய் அவன் நினைத்திருந்தான்.  இன்று அந்த நாள் அவன் மீது விழுந்து மலைப்பாம்பாய் சுற்றிக் கொண்டது. காற்றில் ஒரு பெரிய உயர்ந்த வேப்பமரம் சலசலத்து ஆடி அசைந்து குதூகலித்துக் கொண்டிருந்தது.  ஏதோ வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னத்தை போல் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்துவிட்டு அவன் வயலை நோக்கி தளர்ந்து நடந்தான். செல்வத்தின் தந்தை கடலைச் செடிகளுக்குத் தண்ணீர் கட்டிக் கொண்டிருந்தார்.  வரப்பில் ஒரு பெரியவர் நின்று  கொண்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தார்.  அவரைக் கண்டவுடன் என்ன கேட்பாரோ என்று துணுக்குற்றவனாய் அங்கு வந்தான்.  தெரிந்த முகங்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவன் மனம் கொஞ்ச நாளாய் தடுமாறுகிறது. " யாரு செல்வனா?  என்னடாப்பா செஞ்சிக்கிட்டிருக்கே? " " சும்மதான் பெரியப்பா இருக்கேன்! " " காலேஜுக்கெல்லாம் போய் படிச்சயே!  ஏதாவது வேலை கீலை கெடச்சுதா. " முத்தண்ணே!  இவன நம்பித்தா கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு டிகிரி படிக்க வச்சேன்.  என்ன புரயோசனம்?  நம்மல காப்பாத்த் வேண்டிய நேரத்தல இன்ற...

7. தேடல்

Image
  7. தேடல் தோல்வியே வெற்றிக்கும் படிக்கட்டு என்று எத்தனை முறைதான் தோற்பது? இந்த படிக்கட்டுகள் பாதாளத்திற்கல்லவா இறங்கிச் செல்கின்றன? பாதாளத்திற்கும் கீழா சிகரங்கள் இருக்கின்றன?               **********************

6. எத்தனை பெருமூச்சுகள்?

Image
6. எத்தனை பெருமூச்சுகள்? வாழ்வு மரத்திலிருந்து உதிர்ந்த கனிகள் எத்தனை? உள்ளச் சுரங்கத்துள் நினைவுபடிவுகள் எத்தனை? மன ஆழங்களில் எத்தனை  சுளுக்குகள்? உள்ளக்குடுவையில் எத்தனை வேதிவினைகள்? வாழ்வை  அலசி ஆராய்கையில் எத்தனை பெருமூச்சுகள்?          ***********************

7. காணாமல் போனேன்.

Image
  7. காணாமல் போனேன். சினிமா என்பது அந்தக் காலத்தில் வாழ்வின் மிக சந்தோச பக்கங்கள். எம்ஜிஆர் புதுப்படம் வரும்போதெல்லாம் எங்கள் அப்பா சினிமா புரோக்ராம் போடுவார். மாலை 5 மணி சதரன் பஸ்ஸில் குடும்பமாக நாமக்கல் போவோம். முதலில் எம்ஜிஆர் படம் பார்த்துவிட்டு இரண்டாவது ஆட்டம் சிவாஜி,  ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன் போன்றோர்களின் ஏதேனும் ஒருவர் படத்தை பார்ப்போம். பிறகு எங்கள் அப்பாவின் சைக்கிள் கடை வைத்துள்ள நண்பரொருவரின் கடையில் சென்று படுத்துக் கொள்வோம். விடியற்காலை முதல் பஸ் ஆன செல்வம் பஸ்ஸில் வீடு வந்து சேருவோம். அதேபோன்று அக்கம் பக்கங்களில் வரும் திருவிழாவிற்கு செல்லும் போது எப்படியும் ஒன்றிரண்டு  திரைப்படம் பார்த்து வருவோம்.  ஒரு முறை ஆடி பதினெட்டு தினத்திற்கு கொடுமுடி ஆற்றுக்கு சென்றோம். அந்தக் காலத்தில் அரசு பேருந்துகள் கிடையாது. தனியார் பேருந்து தான் அதுவும் ஒன்றிரண்டு தான் இருக்கும். அதிகமாக வேன்கள் போகும். வேனின் உள்ளேயும் மேலேயும் மக்கள் ஏறி பயணம் செய்வார்கள். கொடுமுடியில் இருந்து வேலூருக்கு வேனில் வந்து எங்கள் ஊருக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். கொடுமுடியில் இருந்து த...

5. யாராவது தட்டுங்கள்!

Image
5. யாராவது தட்டுங்கள்! பாலை  மணல் வெளியில் நடந்து நடந்து கால்கள் துவள கண்கள் மயங்க விழுந்து சரிய.... குலை நடுங்க விழித்தேன் கனவிலிருந்து! இருட்டு! என்னைச் சுற்றிலும்! கதவிடுக்கில் மட்டும் நிற்கிறது கலங்கரை விளக்கம். தாகம்! என்னுயிர் எங்கும்! கதவுக்கு வெளியே மழைச்சாரல் ஓசை! கதவு  தாளிட்டுள்ளது நான்தான்  தாளிட்டேன். யாராவது தட்டினால் திறந்து விடுவேன் யார் தட்டுவார்கள்? எப்போது  தட்டுவார்கள்?    *******

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

Image
6. பாட்டி எங்கள் குலதெய்வம் அதிகாலையில் எனது மூத்த மகன் அரசு தேர்வு எழுத மதுரை புறப்பட்டு சென்றான். வாழ்த்தி அனுப்பினோம். அரசு தேர்வில் வெற்றி பெற கடவுள் அருள் என்ற கொடுப்பினை வேண்டும்.  தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கடினமாக தீவிரமாக பாடுபடுகிறவர்களுக்கு அந்த கொடுப்பினைக்கான  வாய்ப்பு இருக்கிறது என்பார்கள். இயன்றளவு படித்து உள்ளான். இருப்பினும் உறுதியாக எதனையும் சொல்ல முடியாதல்லவா? முயற்சி செய்வது மட்டும் தான் நமது கையில் இருக்கிறது. அதற்கான பலன் என்பது இறைவன் கையில்தான் உள்ளது. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கை உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.  நாளை அப்பாவிற்கு முதலாம் ஆண்டு நினைவு நாள். அதற்கான முன்னேற்பாடுகள் இன்று செய்யப்பட்டன. என்னையும் எனது அண்ணன் தங்கையையும் படிக்கவைத்து அரசு வேலை பெறுவதற்கு வழிவகை செய்த எனது அப்பாவை நினைத்துப் பார்க்கின்றபோது எங்களுடைய பாட்டன் பாட்டியையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. பாட்டனை விட பாட்டியை நினைத்தே  ஆக  வேண்டும். ஏனென்றால் அவர்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் பாட்டனை எங்கள் அப்பாவே  பார்த்தது கிட...