6. பாட்டி எங்கள் குலதெய்வம் அதிகாலையில் எனது மூத்த மகன் அரசு தேர்வு எழுத மதுரை புறப்பட்டு சென்றான். வாழ்த்தி அனுப்பினோம். அரசு தேர்வில் வெற்றி பெற கடவுள் அருள் என்ற கொடுப்பினை வேண்டும். தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கடினமாக தீவிரமாக பாடுபடுகிறவர்களுக்கு அந்த கொடுப்பினைக்கான வாய்ப்பு இருக்கிறது என்பார்கள். இயன்றளவு படித்து உள்ளான். இருப்பினும் உறுதியாக எதனையும் சொல்ல முடியாதல்லவா? முயற்சி செய்வது மட்டும் தான் நமது கையில் இருக்கிறது. அதற்கான பலன் என்பது இறைவன் கையில்தான் உள்ளது. நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் வாழ்க்கை உருண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. நாளை அப்பாவிற்கு முதலாம் ஆண்டு நினைவு நாள். அதற்கான முன்னேற்பாடுகள் இன்று செய்யப்பட்டன. என்னையும் எனது அண்ணன் தங்கையையும் படிக்கவைத்து அரசு வேலை பெறுவதற்கு வழிவகை செய்த எனது அப்பாவை நினைத்துப் பார்க்கின்றபோது எங்களுடைய பாட்டன் பாட்டியையும் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியாது. பாட்டனை விட பாட்டியை நினைத்தே ஆக வேண்டும். ஏனென்றால் அவர்தான் எங்கள் குலதெய்வம். எங்கள் பாட்டனை எங்கள் அப்பாவே பார்த்தது கிட...
3. பூவில் நுழைந்து தேனில் கலந்து... பூவில் நுழைந்து தேனில் கலந்து மணத்தை சுமந்து வானில் மிதந்து காற்றில் நுழைந்து ஊற்றில் கலந்து மருந்தைச் சுமந்து மனதைக் கவர்ந்து வசந்த கால தென்றல் காற்று வாரிச் செல்லும் இன்னிசைப்பாட்டு காதில் கேட்கக் கரும்புச்சாறு காலமெல்லாம் கவி பாடு! இனிய காலை வணக்கம்!
 1. தொடுவானப் பறவைகள் இப்படி ஒரு நாள் வரும் என்று நெடுநாளாய் அவன் நினைத்திருந்தான். இன்று அந்த நாள் அவன் மீது விழுந்து மலைப்பாம்பாய் சுற்றிக் கொண்டது. காற்றில் ஒரு பெரிய உயர்ந்த வேப்பமரம் சலசலத்து ஆடி அசைந்து குதூகலித்துக் கொண்டிருந்தது. ஏதோ வரலாற்று சிறப்புமிக்க நினைவு சின்னத்தை போல் ஒரு கணம் நின்று நிமிர்ந்து பார்த்துவிட்டு அவன் வயலை நோக்கி தளர்ந்து நடந்தான். செல்வத்தின் தந்தை கடலைச் செடிகளுக்குத் தண்ணீர் கட்டிக் கொண்டிருந்தார். வரப்பில் ஒரு பெரியவர் நின்று கொண்டு அவருடன் பேசிக் கொண்டிருந்தார். அவரைக் கண்டவுடன் என்ன கேட்பாரோ என்று துணுக்குற்றவனாய் அங்கு வந்தான். தெரிந்த முகங்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவன் மனம் கொஞ்ச நாளாய் தடுமாறுகிறது. " யாரு செல்வனா? என்னடாப்பா செஞ்சிக்கிட்டிருக்கே? " " சும்மதான் பெரியப்பா இருக்கேன்! " " காலேஜுக்கெல்லாம் போய் படிச்சயே! ஏதாவது வேலை கீலை கெடச்சுதா. " முத்தண்ணே! இவன நம்பித்தா கடன உடன வாங்கி கஷ்டப்பட்டு டிகிரி படிக்க வச்சேன். என்ன புரயோசனம்? நம்மல காப்பாத்த் வேண்டிய நேரத்தல இன்ற...
Comments
Post a Comment