6. எத்தனை பெருமூச்சுகள்?





6. எத்தனை பெருமூச்சுகள்?


வாழ்வு மரத்திலிருந்து

உதிர்ந்த கனிகள்

எத்தனை?


உள்ளச் சுரங்கத்துள்

நினைவுபடிவுகள்

எத்தனை?


மன ஆழங்களில்

எத்தனை 

சுளுக்குகள்?


உள்ளக்குடுவையில்

எத்தனை

வேதிவினைகள்?


வாழ்வை 

அலசி ஆராய்கையில்

எத்தனை

பெருமூச்சுகள்?



         ***********************

Comments

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்