5. யாராவது தட்டுங்கள்!




5. யாராவது தட்டுங்கள்!



பாலை 

மணல் வெளியில்

நடந்து நடந்து

கால்கள் துவள

கண்கள் மயங்க

விழுந்து சரிய....

குலை நடுங்க

விழித்தேன்

கனவிலிருந்து!


இருட்டு!

என்னைச் சுற்றிலும்!

கதவிடுக்கில் மட்டும்

நிற்கிறது

கலங்கரை விளக்கம்.


தாகம்!

என்னுயிர் எங்கும்!

கதவுக்கு வெளியே

மழைச்சாரல் ஓசை!


கதவு 

தாளிட்டுள்ளது

நான்தான் 

தாளிட்டேன்.


யாராவது தட்டினால்

திறந்து விடுவேன்

யார் தட்டுவார்கள்?

எப்போது 

தட்டுவார்கள்?


   *******

Comments

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்