என்னுரை - இது முன்னுரை
என்னுரை - இது முன்னுரை
'நேற்று என்பது நினைவு ஆனது!
நாளை என்பது கனவு ஆனது!
இன்றுமட்டுமே நிஜம் ஆனது!'
என்று ஒரு பாடல் பாடுகிறது.
நேற்றை நினைத்து
வாடுவதையும், நாளையை
நினைத்து கலங்குவதையும்
விட்டுவிட்டு இன்றைய
தினத்தை இனிதே வாழ
வேண்டும் என்று இந்தப்
பாடல் சொல்கிறது.
"நேற்று போல் இன்று இல்லை!
இன்று போல் நாளை இல்லை!
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே!"
என்ற இன்னொரு திரைப்பட
பாடலை எத்தனையோ முறை
கேட்டிருப்பீர்கள்!
"நேற்று போல் இன்று இல்லை!
இன்று போல் நாளை இல்லை!"
என்கின்றபோது ஒவ்வொரு
நாளும் ஒரு புதிய உலகம் தான்!
ஒவ்வொரு விடியலும்
புதிய உதயம் தான்!
இந்தத் தொடரில் நான் என்ன
எழுதப் போகிறேன் என்று எனக்கு
இப்போது எதுவும் தெரியாது!
ஒவ்வொரு நாளும் நான் புதிதாக
சந்திக்கின்ற புதிய புதிய
அனுபவங்கள் தான் இந்த புதிய
உலகம் சொல்ல உள்ள
விடயங்கள்!
கோமாளி திரைப்படத்தில் ஜெயம்
ரவி பல ஆண்டுகள் நினைவின்றி
கோமாவில் இருந்து விட்டு பிறகு
நினைவு ஏற்பட்டு இந்த உலகத்தை
புதிதாக பார்த்து வியந்து போனது
போல்தான் நானும் சுமார் 20
ஆண்டுகள் ஒரு சின்ன
உலகத்திற்குள் கட்டுண்டு
பாதுகாப்பாக இருந்துவிட்டு
திடீரென்று இப்போது
பாதுகாப்பில்லாத பரந்து விரிந்த
இந்த உலகத்திற்குள் வந்து
விழுந்து எல்லாவையும் புதிதாகப்
பார்க்கின்றேன்.
திக்குத் தெரியாத காட்டில் சிக்கிக்
கொண்டது போல் சில சமயம்
விழிக்கின்றேன்!
திசை தெரியாத கடலில் விழுந்து
விட்டதைப் போல் சில சமயம்
தவிக்கின்றேன்!
தற்போது நான் எதிர்கொள்கின்ற
புதிய புதிய நிகழ்வுகளில் நான்
முன்னெடுக்கும் செயல்களும்,
அதனால் எழும் பிரச்சனைகளும்,
எதார்த்த நிலவரங்களை புரிந்து
மாற்றிக்கொள்ளும்
நடவடிக்கைகளும், அப்போது
ஏற்படும் மன போராட்டங்களும்
தான் இந்த புதிய உலகம்!
இதனை நான் காணும் உலகம்
எனலாம்!
எனது சுயதரிசனம் எனலாம்!
நான் எதிர் கொள்ளும் புதிய
அனுபவங்கள் எனலாம்!
எது எப்படி என்றாலும் இனி நான்
நாளும் கண்டுணர போவதுதான்!
எனது புதிய உலகம்!
சரி! எனது புதிய உலகத்திற்குள்
போகலாமா?
உள்ளே போகலாம்!
வாருங்கள்!
நாளை முதல்...
(பயணம் தொடரும்....!)
-------------------------------------------------------------------

வணக்கம். புதிய உலகத்திற்குள் வருவதற்கு முன்பாகவே காந்தியப் பணிகளை தொடங்கி வெற்றியும் கண்டுள்ளீர்கள். காந்தி வகுத்த பாதை, தங்களது பணி ஓய்வு காலத்தை பாதுகப்பானதாக, சமூகத்திற்கு மிகவும் பயனுள்ள பணிகளை மேற்கொள்ளும் விதமாக தங்களுக்கு அமையும் என்பது திண்ணம். இணைந்து பணியாற்றுவோம். பணி நிறைவு காலத்தை நமக்கும், சமூகத்திற்கும் பணியாற்றுவதில் நல்ல தொடக்கமாக அமைந்துள்ளது. நல்வாழ்த்துக்கள். அருள்மிகு சிவகாமசுந்தரி சமேத தில்லை ஸ்ரீ ஆனந்த நடராஜப் பெருமான் அருள்புரிய வேண்டுகிறேன். நன்றி
ReplyDelete🙏🙏🙏
மிக்க நன்றி!
DeleteCongratulations to continue your journey
ReplyDeleteThank you very much!
Delete