1. பட்ட மரம் பூ பூக்கும்!
பட்ட மரம்
பூ பூக்கும்!
*
திடீர்
மின்னல் தாக்கி
இந்த மரம்
பட்டுப் போய்விட்டது!
சூரியன்
சுட்டெரிக்கிறது!
காற்று
கீழே தள்ளப்
பார்க்கிறது!
நீரலை
அடித்துச் செல்ல
பார்க்கிறது!
நிலம்
புதைத்துக் கொள்ளப்
பார்க்கிறது!
ஆகாயம்
உறிஞ்சிக்கொள்ளப்
பார்க்கிறது!
பஞ்சபூதங்களும்
பகையாகி நிற்கிறது!
இருப்பினும்
இன்னுமொரு
வாழ்வு தர
இறைவனிடம்
இந்த மரம்
மன்றாடிக்
கொண்டிருக்கிறது!
வேரில் நீர்
ஏறிக்கொண்டு
இருக்கிறது!
அதனால்
விறைப்பு
கூடிக்
கொண்டிருக்கிறது!
தண்டுகளிலும்
புத்துணர்வு
புதிதாக
வந்து
கொண்டிருக்கிறது!
தளிர்
துளிர் விட
துடித்துக்
கொண்டிருக்கிறது!
துளிர் தளிர் ஆகி
தளிர் இலையாகி
இலை தண்டாகி
தண்டு கிளையாகி
கிளை பூவாகும்
கனவு இதனுள்
பூவாக பூக்கிறது!
அதனால்...
பட்ட மரம்
பூ பூக்கும்!
உறுதியாக
பட்ட மரம்
பூ பூக்கும்!
பாலைவனம்
சோலையாகும்!
பாறையிலும்
நீர் சுரக்கும்!
தன்னம்பிக்கை
தளரா முயற்சி
கடின உழைப்பு
கடவுள் அருளும்
இருந்தால்...
தன்னம்பிக்கை
தளரா முயற்சி
கடின உழைப்பு
உடன்
இருந்தால்...
கடவுள் அருளும்
தானாக
கைகொடுக்கும்!
கனவெல்லாம்
நனவாகும்!
காலமும்
கனிந்து வரும்!
ஆதலால்
இந்தப் பட்ட மரம்
உறுதியாக
பூ பூக்கும்!
*****
Comments
Post a Comment