4. விடியலின் வெளிச்சம் வரும்!
விடியலின்
வெளிச்சம்
வரும்!
***
என்னை சூழ்ந்து
சவால்கள்
கொக்கரிக்கின்றன!
விளக்கில் விழுந்த
விட்டில் பூச்சி ஆவேனா?
இருளைக் கிழிக்கும்
விடியல் ஆவேனா?
ஒரு கலக்கம்
இருக்கிறது!
ஆனாலும்
புதைத்தாலும்
விதை ஆவேன்!
சிதைத்தாலும்
அணு ஆவேன்!
என்ற நம்பிக்கையும்
உடன் இருக்கிறது!
ஆதலால்
நான் ஒரு
வெளிச்ச விதையாய்
முளைக்கின்றேன்.
அதனால்,
இருட்டு கிழியும்
ஒரு நாள்!
விடியலின்
வெளிச்சம் வரும்!
தைக்கும்
முள்ளும் மலரும்!
தகிக்கும்
காலமும் குளிரும்!
------------------------------------
Comments
Post a Comment