2. ஓய்வும் சாய்வும்

 




2. ஓய்வும் சாய்வும்



பணிக்காலத்தில்

என்னுடன் பேசுவதே 

பாக்கியம் என்றவர்கள் 

பேச மறந்து 

போனார்கள்!


நட்பே

பெரும் வரம் 

என்றவர்கள் 

சாபம் என்று 

தலை 

முழுகினார்கள்!


எதைச் சொன்னாலும் 

வேதம் என்று 

சொன்னவர்கள்

தற்போது

அத்தனையும் 

விஷம் என்கிறார்கள்!


எதைச் செய்தாலும் 

அற்புதம் என்று

மதித்தவர்கள்

எல்லாவும் 

வீண் என்று 

மிதித்தார்கள்!


ஓய்வுக்குப் பிறகு

அதைச் செய்யலாம் 

இதைச் செய்யலாம் 

என்று

ஆலோசனை 

சொன்னவர்கள் 

எல்லாம்

இருந்த இடம் 

தெரியாமல் 

காணாமல்

போனார்கள்!


ஏதேதோ செய்யலாம் 

என்று எண்ணியிருந்த 

விஷயங்களெல்லாம் 

என்னவென்றே

தெரியாமல்

போய்விட்டன!


என்ன செய்வது 

எதைச் செய்வது 

என்று தெரியாமல் 

தவித்துக் 

கொண்டிருக்கிறேன்!


எங்கு செல்வது 

எப்படி செல்வது 

என்று தெரியாமல்

விழித்துக் 

கொண்டிருக்கிறேன்!


இரவிற்குப் பிறகு 

பகல் வருகிறது!


புயலுக்குப் பிறகு 

அமைதி வருகிறது!


புது விடியல் 

வருமென

இந்த இரவு

காத்திருக்கிறது!


புதிய உலகம் 

தோன்றும் என 

இந்த பூமி 

பார்த்திருக்கிறது!


புது விடியல் 

வரும்!

விடியும் வரை

காத்திருப்பேன்

நம்பிக்கையோடு!


புத்துலகம்

தோன்றும்!

தோன்றும் வரை

தொடர்ந்திடுவேன்

மன உறுதியோடு!


தொலைந்தது கிட்டும்!

சென்றது திரும்பும்!

விழுந்தது முளைக்கும்!

என்ற நம்பிக்கையோடு 

இனி நாட்கள் நகரும்! 



****

Comments

  1. தங்களுக்கு விடியல் எப்பொழுதோ வந்து விட்டது சார்.
    மனமார்ந்த இனிய நல் வாழ்த்துகளுடன்,
    சக்திமணி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

6. பாட்டி எங்கள் குலதெய்வம்

இசை தரும் இனிய பாடல்கள் - 3

1. தொடுவானப் பறவைகள்